ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே என்
ஆற்றலானவரே
1.
நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும் என்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும் -ஆளுகை
2.
அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே என் – ஆளுகை
3.
புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும் என்னை
பண்னடுத்தும் பயன்படுத்தும் – ஆளுகை
4.
அப்பாவை அற்ந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளி பெறணும்
மகிமையின் அச்சாரமே – ஆளுகை
5.
உள்ளான மனிதனை
வல்லமையாய் பலப்படுத்தும்
அன்பு ஒன்றே ஆணிவேராய்
அடித்தளமாய் அமைந்திடணும் – ஆளுகை
6.
கிறிஸ்துவின் அன்பின் ஆழம்
அகலம் உயரம் உணரணுமே
நினைப்பதற்க்கும் ஜெபிப்பதற்க்கும்
அதிகமாய் செய்பவரே – ஆளுகை
7.
சங்கீதம் கீர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றி பலி செலுத்தணுமே – ஆளுகை
8.
போர் செய்யும் ஆயுதமாய்
உம் வசனம் தாருமையா
எல்லாவித ஜெபத்தோடு
ஆவியிலே மன்றாடணும் – ஆளுகை
9.
என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் ஆவியாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன் – ஆளுகை
10.
அரண்களை தகர்த்தெறியும் என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்டுத்தும் சிறைப்படுத்தும் – ஆளுகை